1993ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜூராசிக் பார்க்'. இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜூராசிக் பெயர் கொண்டு நிறைய படங்கள் வெளியாகின. 2018 ஆம் ஆண்டு இயக்குநர் பாயனோ இயக்கத்தில் வெளியான 'ஜூராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம்' என்ற படம் கடைசியாக வெளியாகியிருந்து.
தற்போது இயக்குநர் கொலின் ட்ரெவாரோ இயக்கத்தில் உருவாகி வரும் புதிய ஜூராசிக் படத்திற்கு பெயர் வெளியாகியுள்ளது. அதன் படி 'ஜூராசிக் வேர்ல்ட்: டொமினியன்' என்று பெயர் வைத்துள்ளனர். இதனை இயக்குநர் கொலின் ட்ரெவாரோ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். உதவி இயக்குநர் ஒருவர் பிடித்திருக்கும் கிளாப் போர்டில் படத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது. இப்படம் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது