நீண்டகாலமாக திரைத்துறைக்கு பங்காற்றிய கலைஞர்களை கவுரவிக்க அமெரிக்க திரைப்பட நிறுவனத்தால் (American Film Institute) வாழ்நாள் சாதனையாளர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பழம்பெரும் நடிகை ஜூலி ஆண்ட்ரியூஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
#AFIAward - ஜூலி ஆண்ட்ரியூஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! - ஜூலி ஆண்ட்ரியூஸ்
48ஆவது AFI வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ஜூலி ஆண்ட்ரியூஸ் (Julie Andrews) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க திரைப்பட நிறுவனத் தலைவர் கத்லீன் கென்னடி, ஜூலி ஆண்ட்ரியூஸின் திறமை காலங்கடந்து நிற்கக்கூடியது. கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அவருக்கு இந்த விருதை வழங்கு ஏஎஃப்ஐ பெருமை கொள்கிறது என தெரிவித்துள்ளார்.
ஜூலி ஆண்ட்ரியூஸ் ‘மேரி பாப்பின்ஸ்’ படத்துக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். அதேபோல் ’தி சவுண்ட் ஆஃப் மியூசிக்’, ‘விக்டர்/விக்டோரியா’ ஆகிய படங்களுக்காக இரண்டு முறை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். ஐந்து கோல்டன் குளோப் விருதுகள், மூன்று கிராமி விருதுகள், இரண்டு எம்மி விருதை பெற்றுள்ள ஜூலிக்கு, 2020 ஏப்ரல் 25ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் விழாவில் AFI வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.