தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘கோல்டன் லயன்’ அடுத்து 'ஜோக்கர்' மகுடத்தில் ஏறிய ‘கோல்டன் ஃப்ராக்’! - கோல்டன் லயன் விருது படங்கள்

பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை புரிந்த ஜோக்கர் படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வாங்கி குவித்துவருகிறது.

joker

By

Published : Nov 17, 2019, 8:46 PM IST

டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் ஜோக்கர். இந்த கதாபாத்திரத்தை பல படங்களில் வில்லனாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் ஜோக்கரின் முன்கதையை யாரும் படமாக்கியதில்லை. இப்போது முதன்முறையாக ஜோக்கர் உருவான கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் டோட் பிலிப்ஸ். ”ஆர்தர் ஃப்ளெக் என்பவர், எப்படி ஜோக்கராக மாறுகிறார்” என்பதை மையமாக வைத்து ‘ஜோக்கர்’ திரைப்படம் எடுக்கப்பட்டது.

அதில், ஜோக்கரின் கதாபாத்திரமான கோத்தமின் நெறுங்கிய சமூகத்தில் வாழும் ஆர்தர், தன்னைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என விரும்புகிறார். மற்றவர்கள் கவனத்தைப் பெற ஜோக்கர் வேஷம் போட்டு அலைகிறார். ஆனால் பிறரால் அவமானப்படுத்தப்படுகிறார். உணர்ச்சியற்ற மனநிலைக்கும், கொடூர மனநிலைக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார். பின்னர் தொடர்ந்து தவறான முடிவுகளை எடுப்பதாக கதை நகரும். இந்த படம் வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ஒரு பில்லியன் டாலர் வசூலித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸின் பல சாதனைகளைப் புரிந்த இப்படம் இந்தாண்டு வென்னிஸ் திரைப்பட விழாவில் ‘கோல்டன் லயன்’ விருதைப் பெற்றது. இதனையடுத்து இப்படம் போலந்து நாட்டில் நடைபெற்ற கேமர் இமேஜ் என்னும் சர்வதேச திரைப்படவிழாவில் கலந்துகொண்டு ‘கோல்டன் ஃப்ராக்’ விருதைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details