தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘தி டார்க் நைட்’ சாதனையை கடந்த ஜோக்கர் - ஜாக்வின் பீனிக்ஸ்

பேட்மேன் சீரிஸான ‘தி டார்க் நைட்’ படத்தின் வசூல் சாதனையை ‘ஜோக்கர்’ படம் முறியடித்துள்ளது.

Joker movie collection

By

Published : Nov 22, 2019, 8:05 PM IST

டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்வின் பீனிக்ஸ் நடித்து வெளியான திரைப்படம் ‘ஜோக்கர்’. பேட்மேன் சீரிஸின் மோசமான வில்லன்களில் ஒருவனான ஜோக்கரின் முந்தைய வாழ்க்கைக் கதையை சித்தரிக்கும் வகையில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. வன்முறையை ஊக்குவிக்கும்படி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்தாலும், உலக அளவில் இத்திரைப்படம் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்நிலையில் இது பேட்மேன் சீரிஸின் உருவாக்கமான ‘தி டார்க் நைட்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

‘தி டார்க் நைட்’ திரைப்படம் 1,005 பில்லியன் டாலர்கள் வசூல் செய்திருந்தது. ’ஜோக்கர்’ திரைப்படம் இதுவரையில் 1,018 பில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. இன்னும் 63 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தால், ‘தி பேட்மேன் பிகின்ஸ்’ படத்தின் சாதனையை ‘ஜோக்கர்’ முறியடித்து பேட்மேன் சீரிஸின் வசூல் சக்கரவர்த்தி என்ற பெருமையை பெறும். தனிப்பட்ட கதை அல்லாத ஒரு காமிக் கதாபாத்திரத்தின் திரைப்படம் இந்த அளவு வசூல் செய்திருப்பது இதுவே முதல்முறை.

ABOUT THE AUTHOR

...view details