தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்த ஜானி டெப் - ஜானி டெப் புதிய மூவி

லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிகர் ஜானி டெப் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள நஷ்டஈடு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜானி டெப்
ஜானி டெப்

By

Published : Sep 2, 2020, 3:57 AM IST

கரீபியன் கொள்ளையர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்பட சீரிஸ் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்'. இப்படங்கள் முழுவதும் பெரும் வரவேற்பையும் வசூலையும் வாரிக் குவித்தன. இப்படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஜானி டெப்பின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இவர் தற்போது 'ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் 3' (Fantastic Beasts 3) என்னும் படத்தில் நடித்து வருகிறார். COVID-19 தொற்றுநோய் காரணமாக டேவிட் யேட்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது லண்டனில் நிலைமைகள் மேம்படுவதால், அக்டோபர் மாதத்தில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க வார்னர் பிரதர்ஸ் முடிவுசெய்துள்ளது.

இந்நிலையில் ஜானி டெப் முன்னாள் மனைவி நடிகை அம்பெர் ஹெர்ட், தனது புகழை கெடுக்கும் நோக்கில் அவதூறுகளை பரப்பியதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக 50 மில்லியன் அமெரிக்கன் டாலர் வழங்கவேண்டுமெனவும் ஜானி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தற்போது இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என ஜானி டெப் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு காரணம், லண்டனில் அடுத்த மாதம் தனது படப்பிடிப்பு தொடங்க இருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாது என தெரிவித்துள்ளார்.

'அக்வாமேன்' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த அம்பெர் ஹெர்டை 2015 ஆம் ஆண்டு ஜானி டெப் திருமணம் செய்து கொண்டார். பின் கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். இதன்பின் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வழக்கு தொடுத்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details