ஜான் விக் படத்தின் 4ஆம் பாகத்துக்கான பணி தொடங்கியுள்ளது என ஹாலிவுட் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.
சேட் தகல்ஸ்கி இயக்கத்தில் கேனு ரீவ்ஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘ஜான் விக்’. டெரக் கொல்ஸ்டாட் உருவாக்கிய காமிக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இப்படம் உருவானது. 2014ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் சக்கை போடு போட்டது. இதையடுத்து 2017ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகமும், 2019-இல் மூன்றாம் பாகமும் வெளியானது.
முதல் மூன்று பாகங்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து, 4ஆம் பாகம் வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது என ஹாலிவுட் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.
சேட் தகல்ஸ்கி ஒரு ஸ்டண்ட் கலைஞர். அவர் இயக்குநர் அவதாரம் எடுத்த ‘ஜான் விக்’ திரைப்படம் முழுக்க முழுக்க ஸ்டண்ட் காட்சிகளுக்காகவே ரசிக்கப்பட்டது. தற்போது நான்காம் பாகத்தையும் அவரே இயக்குகிறார். இந்தப் படத்தில் கேனு ரீவ்ஸ் உடன் டோனி யென், ரினா சவயமா, சமியர் ஆண்டர்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சே ஹேட்டன், மைக்கேல் பின்ச் எழுதிய ஸ்கிரிப்டின் அடிப்படையில் இப்படம் உருவாகவுள்ளது.
இதையும் படிங்க:பப்ஜி வீரனாக மொட்டை ராஜேந்திரன்!