தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விளம்பரத்திற்காக பேசும் மீரா மிதுன்: ட்விட்டர் கணக்கை முடக்க ஜோ மைக்கல் பிரவீன் கோரிக்கை - kollywood

சென்னை: நடிகை மீரா மிதுனின் சமூகவலைதள கணக்குகளை முடக்கக்கோரி மிஸ் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கல் பிரவீன், காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

joe michael praveen
joe michael praveen

By

Published : Aug 14, 2020, 10:02 PM IST

நடிகை மீரா மிதுன், பிக்பாஸ்- 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். மீரா மிதுன் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. அந்த வகையில், அண்மையில், நடிகர் சூர்யா, விஜயை மிக மோசமாக விமர்சித்து பேசினார். இதற்கு இயக்குநர் பாரதிராஜா வீடியோ மூலம் கண்டித்தார். இதனைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கடுமையான சொற்களால் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், மிஸ் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரும், ராஸ் மெட்ராஸ் நிறுவனருமான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீராமிதுன் மீது நடவடிக்கை கோரி புகாரளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "எப்போதும் மீடியா வெளிச்சத்தில் இருப்பதற்காகவே மீரா மிதுன் தமிழ் திரையுலகினர் மீதும் அவர்களது குடும்பத்தாரையும் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார். தன் மீது சமூகவலைதளத்தில் மிகவும் கேவலமாக கருத்துகளை வெளியிட்டு, நற்பெயரை கெடுக்கும் விதமாக அவதூறாக பேசுகிறார்.

சுய விளம்பரத்திற்காக மட்டுமே ஆசைப்பட்டு அவர் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார். திரையுலகினரின் சாதி, மதங்களை குறிப்பிடுவதால், கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், மீரா மிதுனின் முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதள கணக்குகளை முடக்க கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

ட்விட்டர் கணக்கை முடக்குங்க சார்

மேலும், மீரா மிதுனுக்கு எதிராக பேசியதால் தனக்கு போனில் கொலை மிரட்டல் வருவதாக நடிகை ஷாலு ஷம்மு, மீரா மிதுன் மீது புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தலைவர்கள் உருவாக்கிய சுதந்திரத்தை கொண்டாடி மகிழ்வோம் - ராம்நாத் கோவிந்த்

ABOUT THE AUTHOR

...view details