தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மிருகவதை கூடத்திலிருந்து பசுவை மீட்ட அமெரிக்க நடிகர் - ஜாக்வின் பீனிக்ஸ்

சைவ உணவு ஆர்வலரான ஜோவாகின் பீனிக்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு இறைச்சிக் கூடத்திலிருந்து ஒரு மாடு மற்றும் கன்று குட்டியை காப்பாற்றினார்.

இறைச்சிக் கூடத்திலிருந்து மாடுகளை மிட்ட ஜோவாகின் பீனிக்ஸ்!
இறைச்சிக் கூடத்திலிருந்து மாடுகளை மிட்ட ஜோவாகின் பீனிக்ஸ்!

By

Published : Feb 22, 2020, 1:45 AM IST

நடிகர் ஜாக்வின் பீனிக்ஸ் நடிப்பில் வெளியான ஜோக்கர் படம் அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்களை பெற்றுகொடுத்தது. முதலில் இப்படத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

வெற்றி கொடுத்த ஏற்றம், ஏகப்பட்ட விருதுகளையும் தன்பால் ஈர்த்தது. ஜாக்வின் பீனிக்ஸ் ஆஸ்கார் விருது விழாவில் வாயில்லாத ஜீவன்களான வனவிலங்கு உரிமைகளுக்காக பேசினார்.

விருது விழா முடிந்து அடுத்த நாளே, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு மிருகவதை கூடத்திலிருந்து, ஒரு பசு மாடு மற்றும் கன்றுக் குட்டியை காப்பாற்றினார்.

அங்கு இருந்த பசு மாடு மற்றும் கன்றுக் குட்டியை மீட்டு கலிபோர்னியாவில் உள்ள ஆக்டன் வனவிலங்கு காப்பத்தில் சேர்த்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ கடந்த திங்கள்கிழமை யூடியூபில் வெளியானது.

அந்த வீடியோவில், 'மிருகவதை கூடத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அந்தோனியிடம் ஜாக்வின் மிகவும் மரியாதையாக பேசியுள்ளார். ஜாக்வின் பீனிக்ஸின் இந்த முயற்சிக்கு அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:காக்கிச் சட்டையில் மீசையை முறுக்கும் ரவிதேஜா.!

ABOUT THE AUTHOR

...view details