’முதலாம் நெப்போலியன்’ என அழைக்கப்படும் வரலாற்றின் மாபெரும் வீரர்களில் ஒருவரான பிரஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் வரலாறு விரைவில் திரைப்படமாக உள்ளது.
’கிட்பேக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், சென்ற ஆண்டின், ஹாலிவுட்டின் மிகப்பெரும் வெற்றிப் படமான ’ஜோக்கர்’ திரைப்படத்தில் நடித்து, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்ற நடிகர் வகீன் ஃபீனிக்ஸ், நெப்போலியன் போனபார்ட்டாக நடிக்கிறார். ’க்ளேடியேட்டர்’, ’பிளேட் ரன்னர்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ரைட்லி ஸ்காட் இந்தப் படத்தை இயக்குகிறார்.
கடந்த 2000ஆம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதுகளை அள்ளிய க்ளேடியேட்டர் திரைப்படத்தில் முன்னதாக ரைட்லி ஸ்காட்டுடன் இணைந்துப் பணியாற்றிய வகீன் ஃபீனிக்ஸ், ’கிட்பேக்’ திரைப்படத்திற்காக மீண்டும் அவருடன் இணைந்துள்ளது, ஹாலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது.