டிசி காமிக்ஸின் சிறந்த வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான ஜோக்கரின் முன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘ஜோக்கர்’. டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில், வகீன் பீனிக்ஸ் முன்னணி கதாபாத்திரமேற்று நடித்திருந்தார். ‘ஜோக்கர்’ படம் வெளியானபோதே வகீன் பீனிக்ஸின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்நிலையில் 2020 ஆஸ்கர் விழாவில் அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
ஆஸ்கர் விருதை வென்ற வகீன் பீனிக்ஸ், நாம் இந்த உலகில் நிகழும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என மனிதகுல முன்னேற்றம் குறித்து பேசி கண் கலங்கினார்.