தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர் பிரசாத் படத்தில் இருந்து விலகிய இயக்குநர்! - அந்தாதூன்

நடிகர் பிரசாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்கவில்லை என்றும், அப்படத்திலிருந்து விலகிவிட்டதாக இயக்குநர் ஜேஜே. பெட்ரிக் தெரிவித்துள்ளார்.

anthagan
anthagan

By

Published : Mar 10, 2021, 5:08 PM IST

பாலிவுட்டில் 2018ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான படம் 'அந்தாதூன்'. ப்ளாக் காமெடி க்ரைம் த்ரில்லர் கலந்த இந்தத் திரைப்படத்தில், கண் பார்வை குறைபாடு உள்ளவராக ஆயுஷ்மான் நடித்திருந்தார். இவருடன் தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த படம், பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாது பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் பெற்றுள்ளார். அவர் தனது மகனும் நடிகருமான பிரசாந்தை வைத்து அந்த படத்தை எடுக்கவுள்ளார். தமிழில் ரீமேக் ஆகும் இந்த படத்திற்கு 'அந்தகன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரசாந்துடன் சிம்ரன், யோகி பாபு, கே.எஸ் ரவிகுமார், ஊர்வசி, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

'அந்தகன்' திரைப்படத்தை முதலில் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் விலகவே தற்போது பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 10) பூஜையுடன் ஆரம்பமானது.

இந்த படத்திலிருந்து விலகியது குறித்து ஜே.ஜே பெட்ரிக் அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், " 'அந்தகன்' படத்தை தாம் இயக்கவில்லை. படக்குழுவினருக்கு வாழ்த்துகள். தங்களது உறுதுணைக்கும் அன்புக்கும் நன்றி. விரைவில் தனது அடுத்த படம் குறித்து அறிவிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படமானது மலையாளத்திலும் தெலுங்கிலும் உருவாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details