'எட்டு தோட்டாக்கள்' படத்தை தொடர்ந்து நடிகர் வெற்றி நடித்திருக்கும் திரைப்படம் 'ஜீவி'. இயக்குநர் விஜய் கோபிநாத் இயக்கியுள்ள இப்படத்தில், வெற்றி, கருணாகரன், மோனிகா, ரோகினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த 28ஆம் தேதி வெளியான இப்படம் மக்களின் ஆரவாரத்தோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ள இப்படம் ஜனரஞ்சகமான வெற்றியை பெற்று நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது, முதலில் பேசிய நடிகை ரோகினி, "அறிமுக இயக்குநர்களை மதிக்க வேண்டும் என்பதை 'தெலுங்கு சிவா' படத்தில் டப்பிங் செய்தபோது தெரிந்து கொண்டேன். ஜீவி படம் வெற்றி அடைய வேண்டிய படம். சரியான விஷயத்தை சரியான நேரத்தில் நம் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு இந்த படம்தான் சாட்சி.