மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சு. ராஜா தயாரிப்பில் பாடல் ஆசிரியரும் இயக்குநர், நடிகருமான பா. விஜய் இயக்கத்தில் 'மேதாவி' படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பை தயாரிப்பாளர் ராஜா இன்று (மே 15) தனது பிறந்தநாளை கொண்டும் விதமாக அறிவித்துள்ளார்.
மேலும் ஃபெப்சி சங்கத்தலைவர் ஆர்.கே செல்வமணியிடம் 5 கிலோ எடைக்கொண்ட 25 ஆயிரம் அரசி மூட்டைகளை வழங்கினார். ஹாரர் - திரில்லராக உருவாக இருக்கும் இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் - ஜீவா முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.
ஃபெப்சிக்கு வழங்கிய கரோனா நிவாரணப்பொருட்கள் இவர்களுடன் ராஷி கண்ணா, அழகம் பெருமாள், ராதாரவி, ஒய் ஜி மகேந்திரன், 'கைதி' சாரா, தினா, ரோபோ ஷங்கரின் மகள் பிரியங்கா, ரோகினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மோதாவி டைட்டில் அறிவிப்பு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு தீபக் குமார் பாடி ஒளிப்பதிவு செய்கிறார். சான்லோகேஸ் எடிட்டிங் செய்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், படப்பிடிப்பு தொடங்கப்படும் விவரம் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: 7G ரெயின்போ காலனி படத்தின் ஒளிப்பதிவாளருக்குப் பிடித்த காட்சி இதுதானா..!