தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அசால்ட் சேதுவை மிஞ்சுவாரா தெலுங்கு 'வால்மீகி' - அதர்வா

'ஜிகர்தண்டா' தெலுங்கு ரீமேக்கில் வருண் தேஜ் நடித்துள்ள 'வால்மீகி' படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

வால்மீகி

By

Published : Jun 25, 2019, 3:05 PM IST

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'ஜிகர்தண்டா'. இப்படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், கருணாகரன், பாபி சிம்ஹா, அம்பிகா குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மதுரையை கதைக்களமாக கொண்டு காமெடி கலந்த கேங்ஸ்டராக வெளிவந்த இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது. ரசிகர்களின் நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் கன்னடம், மராத்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஒரு நிஜ உலக தாதாவாக பாபா சிம்ஹா அசால்ட் சேது என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இப்படத்திற்காக பாபி சிம்ஹா, படத்தின் எடிட்டர் விவேக் ஹர்ஷன் ஆகியோருக்கு தேசிய விருது கிடைத்தது. ரஜினிகாந்தின் பாராட்டுகளை பெற்ற கார்த்திக் சுப்பராஜ், ரஜினியை வைத்து பேட்ட திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்க இப்படமே அடித்தளமாக இருந்தது.

இந்நிலையில், 'ஜிகர்தண்டா' திரைப்படம் தெலுங்கில் 'வால்மீகி' என்ற பெயரில் ரீமேக்கானது. வால்மீகி படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். பாபிசிம்ஹா நடித்த 'அசால்ட் சேது' கதாபாத்திரத்தில் வருண் தேஜ் நடிக்கிறார். லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

வால்மீகி

வருண் தேஜ் தெலுங்கு சினிமாவில் வளர்ந்துவரும் இளம் கதாநாயகர்களில் ஒருவர். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டிவரும் வருண்தேஜ் இப்படத்தில் மெனக்கெடுத்து வித்தியாசமான உடல்தோற்றத்துடன் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 'வால்மீகி' படம் ரீலிஸ் ஆகும் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படம் அக்டோபர் ஆறாம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details