தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஜெயம் ரவி. ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ரோமியோ ஜூலியட் போன்ற காதல் கதைகளிலும், பேராண்மை, பூலோகம், டிக்டிக், மிருதன் போன்ற வித்தியாசமான முயற்சிகளிலும், அடங்கமறு, தனி ஒருவன், ஆதிபகவன் போன்ற ஆக்சன் கதைகளிலும் என்று ஒவ்வொரு படத்திற்கும் வெரைட்டி காட்டி வருகிறார்.
காஜல் அகர்வாலிடம் 'கோமாளி' ஆனார் ஜெயம் ரவி! - gomali movie
முதல் முறையாக ஜெயம் ரவியும் காஜல் அகர்வாலும் இணைந்து நடிக்கும் நகைச்சுவை படத்திற்கு 'கோமாளி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டில் ஹீரோவாக அறிமுகமான ஜெயம்ரவி, தனது 25வது படத்தை நெருங்க உள்ளார். இப்படத்தை ரோமியா ஜூலியட், போகன் படங்களின் இயக்குநர் லக்ஷமன் இயக்குகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்நிலையில், டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.
இப்படத்திற்கு 'கோமாளி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் முதல் முறையாக நடிக்கிறார். படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். நகைச்சுவை படமாக உருவாகுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.