சென்னை: இயக்குநர் மணிரத்னம் தனது கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’-ஐ மிகுந்த பொருட்செலவில் எடுத்து வருகிறார். இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இந்நிலையில், இதன் இரண்டு பாகத்திற்குமான தனது பகுதியை முடித்துவிட்டதாக ஜெயம் ரவி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் இப்படத்தில் ராஜ ராஜ சோழனாக நடித்துள்ளார்.
உங்களது ஆசிர்வாதம், அக்கறை மற்றும் என்மீது நம்பிக்கை வைத்தற்கு நன்றி சார்; உங்களுடன் செட்டில் இருப்பதை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் பொன்னியின் செல்வனில் இருந்து விடைபெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி விரைவில் கல்யாண் இயக்கும் புதிய திரைப்படத்தில் இணைகிறார்.
பொன்னியின் செல்வனில் இருந்து விடைபெற்ற ஜெயம் ரவி! - Jeyam ravi com[pleted his portion for ponniyin selvan
பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் காட்சிகளும் நிறைவடைந்தன. மற்ற நடிகர்களுக்கான படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரம் வரை மத்திய பிரதேசத்தில் நடைபெறுகிறது.
Jeyam ravi com[pleted his portion for ponniyin selvan
பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் காட்சிகளும் நிறைவடைந்தன. மற்ற நடிகர்களுக்கான படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரம் வரை மத்திய பிரதேசத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:இரும்பு கை மாயாவி: சூர்யா - லோகேஷ் கூட்டணி