தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முறிவுக்கு வந்த நான்கு ஆண்டுகள் பந்தம்: லோபஸ் - ரோட்ரிக்யூ பிரேக்கப்

ஹாலிவுட் திரையுலகினரால் அதிகம் பேசப்பட்ட தம்பதிகளான ஜெனிஃபர் லோபஸ் - அலெக்ஸ் ரோட்ரிக்யூ தங்களது நான்கு ஆண்டுகள் டேட்டிங் உறவை முறித்துக்கொண்டனர்.

Jennifer Lopez, Alex Rodriguez
ஜெனிஃபர் லோபஸ் - அலெக்ஸ் ரோட்ரிக்யூ

By

Published : Mar 15, 2021, 12:59 PM IST

வாஷிங்டன்:2019ஆம் மார்ச் மாதம் லோபஸ் - ரோட்ரிக்யூ ஜோடி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 2020ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொள்வதாக இருந்த நிலையில், இந்த ஜோடி தற்போது பிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடைசி சந்திப்பு:

டோமினிக் குடியரசு நாட்டில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்தபோது மார்ச் 1ஆம் தேதி இவர்கள் இருவரும் கடைசியாக சந்தித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் பரஸ்பரம் உதவிகளை நாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிவுக்கு காரணமான திருமணத்தைத் தாண்டிய உறவு:

தங்களது உறவை முறித்துக்கொள்வது என இவர்கள் இருவரும் ஒரு மாதத்துக்கு முன்னரே முடிவு செய்துவிட்டனராம். கடந்த ஜனவரி மாதம் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது ரோட்ரிக்யூ, நடிகை மாடிசன் லீக்ரோ இடையே திருமணத்தைத் தாண்டிய பழக்கம் ஏற்பட்டதே, இந்தப் பிரிவுக்கு முக்கியக் காரணம் என விவரமறிந்தவர்கள் கிசுகிசுக்கின்றனர்.

ஆனால், இவர்கள் இருவரும் இந்த விவகாரம் பற்றி இதுவரை வாய்திறக்கவில்லை. ரோட்ரிக்யூ பழகி வருவதாக கிசுகிசுக்கப்படும் பெண்ணை இதுவரை அவர் சந்தித்தது இல்லை என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தாலிய முறைப்படி திருமணம்:

கடந்த ஆண்டில் இத்தாலிய முறைப்படி திருமணம் செய்துகொள்வது என லோபஸ் - ரோட்ரிக்யூ முடிவு செய்திருந்தனராம். கரோனா வைரஸ் பரவல் காரணமாக, திருமணத்தைத் தள்ளி வைத்திருக்கின்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தங்களுக்குள் காதல் இருப்பதை லோபஸ் வெளிப்படுத்தினார். பிரபல டிவி நிகழ்ச்சியில் உரையாடியபோது தனது எதிர் கால கணவர் எப்படி, தனது வாழ்வில் நுழைந்தார் என்பதை விவரித்தார்.

அதில், நான் உணவகம் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவரைப் பார்த்தேன். என்னைத் தாண்டி நடந்து சென்றார். சாப்பிட்டவுடன் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். பின் ஏதோ காரணத்துக்காக உணவகத்துக்குள் வந்தேன். அப்போது அந்த நபரின் தோள்களைத் தட்டி 'ஹாய்' என்று சொல்லத்தோன்றியது என்று மிகவும் ரொமாண்டிக்காக கூறினார்.

குடும்பமாக கொண்டாட்டம்:

இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட பின்னர் 2017 மே மாதம் நிகழ்ச்சி ஒன்றின் சிவப்புக் கம்பள வரவேற்பில் முதல் முறையாக ஜோடியாக சென்றனர்.

இதைத்தொடர்ந்து அதே ஆண்டில் ஒரே குடும்பமாக இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடினர். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இணைந்து பங்கேற்றனர்.

தொடர்ந்து தங்களது மகிழ்ச்சியான தருணங்களை எல்லாம் சமூக வலைத்தள பக்கங்களில் இருவரும் ரசிகர்களுக்குத் தெரிவித்து வந்தனர். 2019 மார்ச் மாதம் லோபஸ் தனது கையில் 'வைர மோதிரம்' அணிந்திருக்கும் புகைப்படத்தை ரோட்ரிக்யூ தனது இன்ஸ்டாகிராமில், பகிர்ந்து, தனது காதலுக்கு சம்மதம் தெரிவித்தார் என்ற கேப்ஷனோடு பதிவிட்டு 'நிச்சயதார்த்தம்' ஆனதை உறுதிபடுத்தினார்.

பல இனிமையான தருணங்களைக் கடந்து வந்த இவர்களது உறவு, தற்போது பிரிவைக் கண்டுள்ளது.

மூன்று முறை விவகாரத்தான லோபஸ்:

ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான ஜெனிஃபர் லோபஸ், ஓஜானி நவோ என்பவரை 1997இல் திருமணம் செய்து கொண்டு 1998இல் அவரைப் பிரிந்தார். இதன்பின்னர் கிறிஸ் ஜட் என்பவரை இரண்டாவதாக 2001ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, 2003ஆம் ஆண்டில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

மூன்றாவதாக 2004ஆம் ஆண்டில் மார்க் அந்தோணி என்பவரைத் திருமணம் செய்தார். இதையடுத்து லோபஸ் - அந்தோணி தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை 2014இல் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே 2002ஆம் ஆண்டில் லோபஸுக்கு ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லாக்கோடு நிச்சயதார்த்தம் ஆனது.

இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பாவான ரோட்ரிக்யூ:

அதேபோல் ரோட்ரிக்யூ, சிந்தியா ஸ்கூர்டிஸ் என்பவரை 2002இல் திருமணம் செய்தார். இதையடுத்து இவர்களுக்கு நடாஷா, எல்லா என இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், 2008ஆம் ஆண்டு விவாகரத்து ஆகிப் பிரிந்தனர்.

இதையும் படிங்க: இந்தியன் மார்வெல் 'சூரியவன்ஷி' வெளியாகும் புதிய தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details