அமெரிக்காவில் திரைப்படம், இசை, தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு துறைகளில் உள்ள பிரபலங்களுக்கு மக்களின் விருப்ப விருது (People's Choice Award) ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது. அந்தவகையில், 2019ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா மோனிகாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மக்களின் விருப்ப விருது பெற்ற அயர்ன் மேன் ஹீரோ, ஜெனிபர் ஆனிஸ்டன் - மக்களின் விருப்ப விருது பெற்ற அயர்ன் மேன் ஹீரோ
வாஷிங்டன்: பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவ்னி ஜுனியர், நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் ஆகியோருக்கு 2019ஆம் ஆண்டுக்கான மக்களின் விருப்ப விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வரிசையில் மக்களின் விருப்ப நாயகன் விருதை, இந்தாண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்தில் 'அயர்மேன்' கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ராபர் டவ்னி ஜுனியருக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று சிறந்த நடிகைக்கான விருது 'ஸ்பைடர்மேன்: ஃபார் ப்ரம் ஹோம்' திரைப்பட நாயகி ஜெனாடியாவுக்கும், சிறந்த திரைப்படம், சிறந்த ஆக்சன் திரைப்படம் உள்ளிட்ட பிரிவுகளில் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படம் விருது வென்றது.
சிறந்த குடும்பப் படத்திற்கான விருது வில் ஸ்மித் நடித்திருந்த 'அலாதீன்' திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. மக்களின் விருப்ப நட்சத்திரத்திற்கான விருது பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டனுக்கு வழங்கப்பட்டது.