தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மனிதநேயம் மிக்க ஹல்க்கும், ஹாலிவுட்டின் இதய தேவதையும்! - Hollywood news

தங்களின் செலிப்ரிட்டி அந்தஸ்தை மனித நேயத்தை வளர்க்கும் விதத்தில் சரியான முறையில் பயன்படுத்தி வருவதற்காக, பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டனும், ஹல்க் கதாபாத்திரத்தில் அனைவரையும் ஈர்த்த பிரபல நடிகர் மார்க் ரஃபலோவும் ஆர்டிஸ்ட் இன்ஸ்பிரேஷன் விருதினைப் பெற்றுள்ளனர்.

Jennifer Aniston Mark Ruffalo

By

Published : Nov 9, 2019, 4:17 PM IST

ஹாலிவுட்டின் முப்பது வருடகாலமாக இதய தேவதையாக வலம் வருபவர், ஜெனிஃபர் ஆனிஸ்டன். தன் செலிப்ரிட்டி அந்தஸ்தை மனித நேயத்தை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தி, பிற கலைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருவதற்காக, ஆர்ட்டிஸ்ட் இன்ஸ்பிரேஷன் விருதினைப் பெற்றுள்ளார்.

Jennifer Aniston

பத்து வருடங்களுக்கும் மேலாக, குழந்தைகளுக்கான ஆராய்ச்சி மருத்துவமனைக்காகக் குரல் கொடுத்து வரும் ஆனிஸ்டன், இந்த விருதைப் பெறுவதற்கு இத்தனை வருடங்கள் தனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Mark Ruffalo

இதே போல், ஹல்க் திரைப்படத்தின் மூலம் குழந்தைகள், மார்வெல் ரசிகர்கள் தொடங்கி, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்திருக்கும் நடிகர் மார்க் ரஃபலோவும் இவ்விருதினைப் பெற்றுள்ளார்.

மார்க் ரஃபலோ எல்ஜிபிடி உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர் என்பதும், மாற்று எரி சக்திக்காகக் குரல் எழுப்பி வரும் சுற்றுசூழல் ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

செல்வாக்குமிக்க சினிமா ஆளுமை விருது பெற்ற கமல் பட நடிகை

ABOUT THE AUTHOR

...view details