நீண்ட நாட்களுக்குப் பிறகு முன்னாள் காதலர்களான ஜெனிபர் அனிஸ்டன் - பிராட் பிட் மீண்டும் தங்களுக்குள்ளான உறவை புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.
ஹாலிவுட் நட்சத்திரக் காதலர்களாக வலம் வந்த அனிஸ்டன் - பிராட் பிட் 2000ஆம் ஆவது ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்தனர். இதையடுத்து 2005ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர்.
இதைத்தொடர்ந்து ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியுடன் நெருக்கமாக பழகிய பிராட் பிட் 2014ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியனருக்கு 5 குழந்தைகள் இருந்த நிலையில், அவர்களை வளர்த்து வந்தனர்.
பின்னர் ஏஞ்சலினாவுக்கும் பிராட் பிட்டுக்கு மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், 2016ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு இவர்களுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது.
இதனிடையே ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின் தெராக்ஸை திருமணம் செய்து கொண்ட அனிஸ்டன் 2017ஆம் ஆண்டு பிரிந்தார்.