ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘சீறு’. ‘அறிந்தும் அறியாமலும்’ புகழ் நவ்தீப் இதில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார். காமெடி நடிகர் சதிஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனுடன் சீறிப் பாயும் ஜீவா! - ஹீரோ
ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீறு’ திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
seeru
‘இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரன், சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள ‘ஹீரோ’ திரைப்படமும் அதே தேதியில் வெளியாகவுள்ளது. இதன்மூலம் சிவகார்த்திகேயன் - ஜீவா இருவரும் கிறிஸ்மஸ் ரேசில் பங்கேற்கின்றனர். அந்த சமயம் தற்போதைக்கு வேறு எந்த முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகாததால், திரையரங்கம் கிடைப்பதில் இரு தரப்புக்கும் பிரச்னையில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'சீறு' பாடகராக அறிமுகமாகும் பிரபல பாடகரின் மகன்!