தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடிடியில் நாளை வெளியாகிறது 'பூமி' ! - jayam ravi's bhoomi movie release in ott news

ஜெயம் ரவியின் 25ஆவது படமான 'பூமி' திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஓடிடியில் நாளை வெளியாகிறது 'பூமி' !
ஓடிடியில் நாளை வெளியாகிறது 'பூமி' !

By

Published : Jan 13, 2021, 3:20 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜெயம் ரவி. இவர் இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து தனது 25ஆவது படமாக 'பூமி' படத்தில் நடித்துள்ளார். நிதி அகர்வால், சரண்யா பொன்வணணன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நாசா விஞ்ஞானியாக நடித்துள்ள ஜெயம் ரவி விவசாயியாகவும் வேடமேற்றுள்ளார். தற்போதைய சூழலில் விவசாயிகள் படுகின்ற பிரச்னைகள் குறித்து இந்த படம் பேசுகிறது. படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஓடிடியில் நாளை வெளியாகிறது 'பூமி' !

திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது பூமி திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை (ஜன. 14) டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க...விவசாயம் தொழிலல்ல; வாழ்க்கை முறை - டிடிவி பொங்கல் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details