கோமாளி பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘பூமி’. இயக்குநர் லக்ஷ்மண் இயக்கியுள்ள இப்படம் ஜெயம் ரவியின் 25Eவது திரைப்படமாகும்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், முழுக்க முழுக்க வேளாண்மையை அடிப்படையாக வைத்தே இப்படம் நகரும் என்பது தெரியவருகிறது.
அதேபோல் வேளாண்மையை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கொடுத்துவிடக் கூடாது என்றும், அதை எப்படியெல்லாம் ஜெயம் ரவி தடுத்து நிறுத்துகிறார் என்பதே படத்தின் கதை என ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.
’பூமி’ படம் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், கரோனா காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இதனையடுத்து வரும் ஜனவரி 14ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:'வந்தே மாதரம்' - பூமி பட பாடல் இன்று வெளியீடு