தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜெயம் ரவி-25 வெளியானது 'பூமி'யின் பர்ஸ்ட் லுக்! - ஜெயம் ரவி 25

நடிகர் ஜெயம் ரவியின் 25ஆவது படமான 'பூமி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

jayam ravi starrer bhoomi first look poster

By

Published : Nov 1, 2019, 5:48 PM IST

இயக்குநர் லக்ஷமன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் பூமி. டி. இமான் இசையமைக்கும் இப்படம் ஜெயம் ரவியின் 25ஆவது படம் என்பதால் இப்படத்தில் கூடுதல் கவனம் செலுத்தி நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

போஸ்டரில் ஜெயம் ரவி விவசாயியைப்போன்று கருப்பு பனியன் அணிந்துகொண்டு, தலைப்பாகையுடன் நிற்கும் காட்சி படத்தைப் பற்றிய ஆர்வத்தை தூண்டும் வண்ணம் உள்ளது.

இந்தப்படம் தனக்கு ஸ்பெஷலான படம் என்றும் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார் ரவி.

இதையும் படிங்க: 'நிசப்தம்' படத்தில் அஞ்சலிக்கு இந்த வேடமா...? இனி யாரும் தப்ப முடியாது!

ABOUT THE AUTHOR

...view details