இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் படங்களில் நடித்து வரும் இளம் நடிகை நிதி அகர்வால். இவர் சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'ismart shankar' என்கின்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் மெகா ஹிட் அடித்தது.
இதனைத்தொடர்ந்து நிதி அகர்வால் தமிழில் ஜெயம் ரவியின் 25ஆவது படமாக உருவாகும் 'பூமி' படத்தில் நடித்து வருகிறார். கரோனா வைரஸ் காரணமாக, அனைத்து மொழிப் படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வீட்டிலிருக்கும் நிதி அகர்வால் சமையல், ஓவியம் வரைதல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் முதல்முறையாக கேக் தயாரித்து எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது தமிழ் மொழி கற்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.