தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்... குடியுரிமை மசோதா குறித்து நடிகர் சித்தார்த் ஆவேசம்!

சென்னை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது எடப்பாடி பழனிசாமியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துவதாக நடிகர் சித்தார்த் விமர்சித்துள்ளார்.

siddharth
siddharth

By

Published : Dec 10, 2019, 11:07 AM IST

நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.

இதில், அரசியல் சாசனத்திற்கு எதிராக எந்த அம்சமும் இடம்பெறவில்லை எனவும் அமித் ஷா தெரிவித்தார். ஒன்பது மணிநேரத்திற்கும் மேல் நீடித்த இந்த விவாதத்திற்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் 311 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 80 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதன் மூலம் மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

இந்த மசோதாவிற்கு தேசிய அளவில் ஆதரவு தெரிவித்த கட்சிகளில் அதிமுக பிரதான பங்கு வகிக்கின்றது. இதுகுறித்து பேசிய அக்கட்சியின் எம்பி நவநீதகிருஷ்ணன், இந்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதையடுத்து, அதிமுக ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், அதிமுகவின் இந்த நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வழிநடத்துவது ஒரு தமிழனாக தனக்கு அவமானமானதாக இருப்பதாகவும், ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி எந்த எல்லைக்கும் செல்வார் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா இருந்திருந்தால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு கடுமையான எதிர்வினை ஆற்றியிருப்பார் என்றும், அவரின் மறைவுக்குப் பின் அதிமுக இந்த நிலைக்கு சென்றுவிட்டது வருத்தமளிப்பதாகவும் சித்தார்த் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா - அனல் பறந்த விவாதம்!

ABOUT THE AUTHOR

...view details