தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஒரு குத்துப் பாட்டுக்கு இத்தன மில்லியன் சம்பளமா? - ஜாக்குலின் பெர்னாண்டஸுன் சம்பளம்

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் ’சாஹோ’ திரைப்படத்தின் ’பேட் பாய்’ பாடலில் நடனமாடும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் சம்பளம் இரண்டு கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பாடலுக்கு நீ ஆட இவ்ளோ சம்பளமா!!

By

Published : Aug 22, 2019, 3:08 PM IST

இயக்குநர் சுஜுத் இயக்கத்தில் யுனி கிரியேஷன் தயாரிப்பில் ஆகஸ்ட் 30ல் வெளியாக இருக்கும் சாஹோ திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பாலிவுட் நாயகி ஷ்ரத்தா கபூர் முன்னணி நடிகையாக நடித்துள்ள இப்படத்தின் ஒரு பாடலில் மட்டும் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் அழகி ஜாக்குலின் பெர்னாண்டஸ் இணைந்துள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த பேட் பாய் பாடலை பாட்ஷா, நீடி மோகன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். சாஹோ படத்தின் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் படு கவர்ச்சியாக தோன்றி நடனமாடும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் ஊதியம் இரண்டு கோடி ரூபாய் (20 மில்லியன்) என தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்கள் ஒரு முழு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை இவர் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி பெற்றுள்ளார் என்பதால் பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details