நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கோலமாவு கோகிலா’. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
நயன்தாராவின் சூப்பர் ஹிட் ரீமேக் திரைப்படத்தில் ஜான்வி கபூர் - ஜான்வி கபூர் திரைப்படம்
’கோலமாவு கோகிலா’ இந்தி ரீமேக் திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![நயன்தாராவின் சூப்பர் ஹிட் ரீமேக் திரைப்படத்தில் ஜான்வி கபூர் ஜான்வி கபூர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9030035-thumbnail-3x2-nayan.jpg)
ஜான்வி கபூர்
இந்நிலையில் தமிழைத் தொடர்ந்து, இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் நயன்தாரா நடித்த கதாப்பாத்திரத்தில் நடிகை ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனந்த் எல்.ராய் தயாரிக்கும் இத்திரைப்படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.
இதையும் படிங்க:திரைப்படமாக உருவாகும் இந்தியாவின் சூப்பர் ஹீரோ 'சக்திமான்'!