தமிழில் முதல்முறையாக டைம் லூப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், 'ஜாங்கோ'. மனோ கார்த்திக் எழுதி, இயக்கிய இந்தப் படத்தை திருக்குமரன் தயாரித்துள்ளார்.
அறிமுக நடிகர் சிதீஷ் குமார், மிருணாளின் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கருணாகரன், ரமேஷ் திலக், அனிதா சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஜாங்கோ படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று (அக்.12) வெளியிட்டுள்ளது. விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் வெளியாகியுள்ள ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
மேலும் புதுமுக நடிகர் சதீஷின் நடிப்பும் வரவேற்புப் பெற்றுள்ளது. விரைவில் படத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:அரண்மனை 3 ரிலீஸ்.... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்