தன்னுடைய அனைத்து முயற்சிகளிலும் தரமான திரைப்படங்களைத் தந்தவர், ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கிய திரைப்படங்கள் உலகளாவிய அளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கின. ஆஸ்கர் விருதுகளையும் இவரது படங்கள் தட்டிச்சென்றன.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் மிக பிரமாண்டமான முறையில் தயாராகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கரோனா நெருக்கடி காரணமாக படத்தின் வெளியீடு தாமதமானதால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமே மிஞ்சியது.
இதையடுத்து ரசிகர்களை துவண்டுபோகவிடாமல் பூஸ்ட் ஏற்ற படக்குழு சார்பில் திரைப்படம் தொடர்பான அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த அப்டேட்களை வெளியிடவே, அவதார் எனும் ட்விட்டர் பக்கம் உள்ளது.
இந்த அவதார் ட்விட்டர் பக்கத்தில் திரைப்படம் தொடர்பான அப்டேட் ஒன்று அண்மையில் வெளியானது. கரோனா தொற்று காரணமாக உலகளவில் திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் அவதார் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது போன்ற புகைப்படம், அந்த ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
தற்போது நியூசிலாந்தில் திரைப்படத்துக்காக உருவாக்கப்பட்ட ஆய்வகத்தின் வைட் ஷாட் புகைப்படமும், செட்டில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக செட்டில் உள்ள அனைத்தையும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் சரிபார்ப்பது போலவும் இருக்கும் புகைப்படமும் வெளியானது.
இந்தப் புகைப்படத்தை அவதார் ட்விட்டர் பக்கம் வெளியிட்டதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு தொடங்கிவிட்ட குஷியில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க... அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு அவதார் மூலம் ரிவீட் அடிப்பேன் - ஜேம்ஸ் கேமரூன்