தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அவதார் 2 திட்டமிட்ட தேதியில் வெளியாகும்' - ஜேம்ஸ் கேமரூன் நம்பிக்கை - James Cameron: Avatar 2 has 'good chance' of releasing on time

'அவதார்' படத்தின் இரண்டாம் பாகம் திட்டமிட்டபடி 2021ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று வெளியாகும் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் காமரூன்
ஜேம்ஸ் காமரூன்

By

Published : May 13, 2020, 6:58 PM IST

பண்டோரா என்கின்ற உலகத்தில் வாழ்பவர்கள், பூமியைச் சேர்ந்த மனிதர்களிடமிருந்து தங்கள் உலகைக் காக்கப் போராடும் கதையான அவதார் திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸில் பண்டோரா உலகம், அங்கு வாழும் மனிதர்கள், பிற விசித்திர உயிரினங்கள், அவர்களின் குணாதிசயங்கள் என இத்திரைப்படம் காண்பவர்களின் கண்களுக்கு விருந்தாகி, ரசிகர்களின் மனதை ஆட்கொண்டது.

தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அவதார் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. சில மாதங்களுக்கு முன், இரண்டாம் பாகத்தில் இடம்பெறவுள்ள 'பண்டோரா' உலகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக, உலகம் முழுவதும் நடைபெற்று வந்த அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அவதார் இரண்டாம் பாகம் திட்டமிட்டபடி 2021ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி நிச்சயம் வெளியாகும் என படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் நியூசிலாந்தில் காட்சிப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தான் அவதார் 2 படத்திற்கான வேலைகளில் மீண்டும் ஈடுபட விரும்புவதாகவும், தங்களால் முடிந்த அளவு விரைந்து படத்தின் பணிகளை முடிக்க விரும்புவதாகவும் கேமரூன் தெரிவித்துள்ளார்.

மேலும் நியூசிலாந்து நாடு கரோனாவை அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக, கரோனாவை ஒழிக்கப் போராடி வருகிறது. துரித கதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபடுவதால், விரைவில் இயல்பு நிலை திரும்பி, படப்பிடிப்புப் பணிகள் நிறைவு பெறும் என்றும் கேமரூன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

சாம் வொர்திங்டன், ஜோயி சல்டனா உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இதிலும் இடம்பெற்றுள்ள நிலையில், கேட் வின்ஸ்லெட், வின் டீசல் உள்ளிட்ட புதிய நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :'அவதார் 2' முதல் பார்வையை வெளியிட்ட கேமரூன்

ABOUT THE AUTHOR

...view details