ஹாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான படம் என்றால் அனைவரும் ஜேம்ஸ் பாண்ட் படத்தையே கூறுவார்கள். அதனால் தான் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியாகும் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பாகங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பெக்ட்ரே' படத்திற்கு பிறகு, தற்போது 'நோ டைம் டூ டை' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதில், முந்தைய நான்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களில், நடித்த டேனியல் கிரெய்க் இப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார்.