தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் வெளியீட்டு தேதியை மாற்றிய 'ஜேம்ஸ் பாண்ட்' படக்குழு- ஒரு முடிவுக்கு வாங்கப்பா - டேனியல் க்ரேய்க்

ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 'நோ டைம் டு டை' திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

James bond No Time To Die movie new release date
James bond No Time To Die movie new release date

By

Published : Jun 15, 2020, 1:11 PM IST

Updated : Jun 15, 2020, 1:33 PM IST

ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இதையடுத்து ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் சீரிஸில் 25ஆவது படமான 'நோ டைம் டு டை' எனப்படும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வெளியாக இருந்தது. இதில் ஜேம்ஸ் பாண்டாக ஐந்தாவது முறையாக டேனியல் க்ரேய்க் நடித்திருந்தார்.

ஆனால் இந்தத் திரைப்படம் வெளியீட்டு தேதிக்கு ஐந்து நாள்கள் முன்னதாக நவம்பர் 20ஆம் தேதியே வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில், 'நோ டைம் டு டை திரைப்படத்தில் பழைய நண்பர்கள் இணைகிறார்கள். பிரிட்டனில் நவம்பர் 12, அமெரிக்காவில் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில்' என்று ஜேம்ஸ் பாண்ட் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டே வெளியாக இருந்தது. பிறகு பிப்ரவரி 2020ல் திரைப்படம் வெளியாக இருந்த நேரத்தில் கரோனா தொற்று காரணமாக தள்ளிப்போய் இறுதியாக நவம்பரில் வெளியாக இருக்கிறது. டேனியல் க்ரேய்கின் இறுதி ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமாக இது இருக்கும். மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ள தேதியில் திரைப்படம் வெளியாகுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இதையும் படிங்க...உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்த்து போராட்டம் - நோ டைம் டூ டை சர்ப்ரைஸ்

Last Updated : Jun 15, 2020, 1:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details