தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வேடத்தில் 'ஜெய்பீம்' சூர்யா! - ஜெய்பீம் சூர்யா

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வேடத்தில் 'ஜெய்பீம்' படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

suriya
suriya

By

Published : Jul 29, 2021, 3:14 PM IST

'கூட்டத்தில் ஒருவன்' படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கும் புதிய படம் 'ஜெய் பீம்'. இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார்.

'ஜெய்பீம்' சூர்யா

இப்படத்தில், ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷான் ரால்டன் இசையமைக்கிறார்.

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு உடன் சூர்யா

இந்நிலையில் இப்படம் 1993ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா ஏற்றிருக்கும் வழக்கறிஞர் வேடம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சந்துருவின் கதாபாத்திரம் என கூறப்படுகிறது.

ஜெய்பீம் இயக்குநருடன் சூர்யா

நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது அப்போது நடந்த ஒரு வழக்கில் பழங்குடி பெண்ணிற்கு நீதிபெற்று தந்ததை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 'சூர்யா 39' அப்டேட்: 'ஜெய்பீம்' வக்கீலாக தோன்றும் சூர்யா

ABOUT THE AUTHOR

...view details