விஜய்யின் 'பகவதி' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இதனையடுத்து 'சென்னை 600028', 'சுப்பிரமணியபுரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.
இவர் தற்போது 'பிரேக்கிங் நியூஸ்', ’எண்ணித் துணிக’, ’சிவ சிவா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெய் சமீபத்தில் கலந்து கொண்ட படப்பிடிப்பில் அவருக்கு விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.