தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மூடிக்கிடந்த கல்மனங்களை பேச வைத்த 'ஜெய் பீம்' - இயக்குநர் தங்கர்பச்சான் - 'Jai Bhim flim'

‘ஜெய் பீம்’ திரைப்படம் மூடிக்கிடந்த கல்மனங்களை பேச வைத்துள்ளதாக இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் தங்கர்பச்சான்
'ஜெய் பீம்' பற்றி

By

Published : Nov 3, 2021, 9:52 AM IST

நவ. 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் பராட்டியதைத் தொடர்ந்து இத்திரைப்படத்திற்கு மேலும், பலதரப்பினரும் தங்களின் பாராட்டுகளையும், வாழத்துகளையும் கூறி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் தங்கர்பச்சான் இத்திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

"ஜெய் பீம் திரைப்படம் மூடிக்கிடந்த கல்மனங்களை எல்லாம் பேச வைத்திருக்கிறது. எத்தனையோ பேர் சட்டங்களைப் படித்தாலும் அண்ணன் சந்துரு போன்ற ஒரு சிலர் தான் வாழ்வு முழுவதும் உயிர் வாழ்வதற்கே போராடும், ஒடுக்கப்பட்ட குரலற்ற மக்களுக்காக அதைப் பயன்படுத்துகின்றனர்; இத்திரைப்படம், மக்களின் விடுதலைக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. காவல்துறை உயர் அலுவலர்களின், அதிகார அழுத்தங்களால் ராசாக்கண்ணு போன்ற அப்பாவி மக்களின் வாழ்வு பறிபோவது; இனியாவது நிறுத்தப்பட வேண்டும்.

தலைமுறைகள் தலை நிமிரட்டும்

நான் அன்று சொன்னதை, சூர்யா இப்பொழுது புரிந்திருப்பார் என்று நினைக்கிறேன். அவருடைய பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இத்திரைப்படத்தைத் தலை நிமிர்ந்து தங்கள் தலைமுறையினரிடம் பெருமையுடன் கூறிக் கொள்வார்கள். இவரைப்போன்றே பெரு முதலீடு படங்களில் மட்டுமே நடிக்கும் மற்ற நடிகர்களும் மனது வைத்தால், இச்சமூகத்திற்கு தேவையான இதுபோன்ற சிறந்த படைப்புக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்" என்று கூறினார்.

சூர்யா நடிப்பில்

மக்களால் கொண்டாடப்படும் இத்திரைப்படத்தைச் சட்டம், நீதி மற்றும் காவல்துறையில் உள்ளவர்கள் கட்டாயம் காண வேண்டும். கலை மக்களுக்கானது! அதை ‘ஜெய் பீம்’ சாதித்திருக்கிறது..!! என்றார்

எனது அன்பு சூர்யா, இயக்குநர் ஞானவேல், அரங்கக் கலை இயக்குநர் கதிர் மற்றும் இத்திரைப்பட நடிப்புக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதாகவும் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மறைக்கப்பட்ட... மறுக்கப்பட்ட பலகதைகள் இனி வரும் - பா.இரஞ்சித் நெகிழ்ச்சியான ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details