சென்னை: த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. மேலும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும் பெற்றது.
இந்நிலையில் இப்படம் ஆஸ்கார் விருதுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. சூர்யா நடித்து வெளியான சூரரைப் போற்று திரைப்படமும் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.