ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்' . இதில் ரஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் பாராட்டிவருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதே அளவு இப்படத்தில் ஒரு சமுதாயத்தினரை மட்டும் இழிவுபடுத்தியுள்ளதாக சர்ச்சையும் வெடித்துள்ளது.