கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படமாக சூர்யா நடிப்பில், த.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம்.
ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் நிகழும் கோரமான ஒடுக்குமுறையை கதைக்களமாகக் கொண்ட இப்படம் நீதியரசர் சந்துருவின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், 9வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை லிஜோமொள் ஜோஸ் என மூன்று விருதுகளை பெற்றுள்ளது. ஏற்கனவே, இப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:GIS தொழில்நுட்ப உதவி மூலம் சட்டப்பேரவை தேர்தல் - நெல்லை ஆட்சியருக்கு விருது