நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான அசுரன், பட்டாஸ் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும், 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்து வருகிறார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.
அதேபோல் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் புதிய போஸ்ட்டரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.