தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடிடியில் வெளியாகும் ஜகமே தந்திரம்? - Cinema Latest News

சென்னை: தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Jagame Thandhiram
ஜகமே தந்திரம்

By

Published : Jan 31, 2021, 2:05 PM IST

பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்பராஜ் இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. இப்படம் கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டியது ஆனால் கரோனா அச்சுறுத்தலால் தாமதமாகியது.

இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஓடிடி தளத்தில் இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகி வெற்றிபெற்றது. அதன் பிறகு விஜய்யின் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றது. பின்னர் ஓடிடியில் வெளியானது. தற்போது தனுஷ் படமும் ஓடிடியில் வெளியாக உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: புதிய ரத்தம் பாய்ச்சும் பிராந்திய மலையாள ஓடிடித் தளங்கள்!

ABOUT THE AUTHOR

...view details