சத்குரு ஜக்கி வாசுதேவ் 'காவேரி கூக்குரல்' என்ற தலைப்பில் சைக்கிளில் பரப்புரை செய்யவுள்ளார். இந்த விழிப்புணர்வு பரப்புரையை தன்னுடைய பிறந்த நாளான செப்டம்பர் 3ஆம் தேதி தலைக்காவிரி இருக்கும் கர்நாடக மாநிலம், குடகுவில் தொடங்க உள்ளார் .
குடகுவில் தொடங்கும் இந்த விழிப்புணர்வு பரப்புரை ஓசூர் ஒக்கேனக்கல்,மேட்டூர், ஈரோடு, திருச்சி, திருவாரூர் என காவிரிப்படுகை முழுவதும் சுமார் 1200 கி.மீ., பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இது தொடர்பாக திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகிறார்.
திரைப்பிரபலங்களை சந்தித்த சத்குரு ஜக்கி வாசுதேவ் அந்த வகையில், சென்னை தி.நகரிலுள்ள சிவாஜி இல்லத்தில் தமிழ் திரையுலகினரைச் சந்தித்தார். இதில் நடிகைகள் ரேவதி, வரலெட்சுமி சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி மணிரத்னம், த்ரிஷா உள்ளிட்டவர்களும் நடிகர்கள் பிரபு, மனோபாலா, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட பலரும் அவரை சந்தித்தனர்.