ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’. இதில் நடிகர் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார், ஜூனியர் பாலையா ,ஜெயப்பிரகாஷ், ஜி.எம் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆர்யாவின் 'மகாமுனி' படப்பிடிப்பு நிறைவு - காப்பான்
சாந்தகுமார் இயக்கத்தில், ஆர்யா நடித்துவந்த ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
ஆர்யா
இப்படத்தை இயக்குநர் சாந்தகுமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அருள்நிதி நடித்த ‘மௌன குரு’ படத்தை இயக்கியவர். மகாமுனி கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
இந்நிலையில், மகாமுனி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.