தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியான மல்டி கேரக்டர் நடிகை! - ஹிப் ஹாப் தமிழா

இசை, நடிப்பு என இரண்டிலும் கலக்கிவரும் ஹிப்ஹாப் தமிழா அடுத்ததாக சூப்பர் ஹிட் பாடலின் முதல் வரியை டைட்டிலாக வைத்து அதன் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளார்.

ஹிப் ஹாப் தமிழாவுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா மேனன்

By

Published : Oct 14, 2019, 9:09 PM IST

சென்னை: ஹிப்ஹாப் தமிழா ஜோடியாக மல்டி கேரக்டரில் தோன்றிய நடிகை ஜஸ்வர்யா மேனன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

சுந்தர் சி இயக்கிய 'ஆம்பள' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா, அதன் பின்னர் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதையடுத்து 'மீசைய முறுக்கு' என்ற படம் மூலம் ஹீரோவாக புதிய அவதாரமெடுத்தார்.

இதைத் தொடர்ந்து 'நட்பே துணை' என்ற படத்திலும் நடித்தார். தற்போது 'நான் சிரித்தால்' என்ற படத்தில் நடித்துவருகிறார். இது கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான ’நாயகன்’ படத்தில் இடம்பெறும் ’நான் சிரித்தால் தீபாவளி’ என்ற பாடலின் முதல் வரியாக உள்ளது.

இந்நிலையில், நான் சிரித்தால் படத்தில் ஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியாக 'தமிழ்ப்படம் 2’இல் நடித்த ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

நய்யாண்டி(spoof movie) திரைப்படமான 'தமிழ்ப்படம் 2'இல் பல்வேறு கதாநாயகிகளை பிரதிபலிக்கும் விதமாக மல்டி கேரக்டரில் நடித்திருப்பார் ஐஸ்வர்யா மேனன். அந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதையடுத்து தற்போது ஹிப்ஹாப் தமிழாவுடன் ஜோடியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details