தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

2500 கலைஞர்கள் வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தும் ஐசரி கணேஷ்! - latest tamil cinema news

சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 2500 கலைஞர்களின், வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்துவதாக அறிவித்துள்ளார்.

ஐசரி கணேஷ்
ஐசரி கணேஷ்

By

Published : May 14, 2020, 11:10 PM IST

ஆண்டுதோறும் தனது தந்தை ஐசரி வேலன் நினைவு தினத்தையொட்டி, மே 14ஆம் தேதியன்று வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலம், திரைப்பட தயாரிப்பாளரான ஐசரி கணேஷ், ஆயிரக்கணக்கான நலிந்த நாடக நடிகர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு அறுசுவை உணவும், புத்தாடைகளும் வழங்குவது வழக்கம்.

இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக, நாடக நடிகர்கள் வாழ்வு ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இவ்வாண்டு, ஒருவருக்கு ரூ.1000 என மொத்தம் 2500 கலைஞர்களுக்கு, ரூ.25 லட்சத்தினை ஐசரி கணேஷ் வழங்கியுள்ளார்.

இந்தத் தொகை நாடக கலைஞர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பணம் சிறியதாக இருந்தாலும், அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கும், மருத்துவச் செலவுக்கும் உதவும் என்று ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஊரடங்கு காலத்தில் தமிழ் கற்கும் ஜெயம் ரவியின் நாயகி

ABOUT THE AUTHOR

...view details