சென்னை:'தி ஃபேமிலி மேன்' இணையத் தொடரின் மூன்றாம் பாகத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதற்கு விஜய் சேதுபதி தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி ஓடிடி தளமான 'அமேசான் பிரைமில்', வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள தொடர் 'தி ஃபேமிலி மேன்-2'. இதில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இயக்குநர் ராஜ், டி.கே இயக்கிய இத்தொடர் ஈழத்தமிழர்கள் தவறாகச் சித்தரித்துள்ளதாகப் பல்வேறு தரப்பில் இருந்தும், இத்தொடருக்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்பும் எழுந்தன.