தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

50% seating arrangements in theaters: தள்ளிப்போகிறதா வலிமை? - ஒமைக்ரான் பரவல்

ஒமைக்ரான் பரவல் காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பால் அஜித் நடித்த வலிமை படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

valimai update  seating arrangements in theaters  valimai movie postpond  valimai movie will postpond due to seating arrangements in theaters  valimai movie release date  வலிமை அப்டேட்  கரோனா கட்டுப்பாடுகள்  வலிமை படம் ரிலீஸ் தேதி  ஒமைக்ரான் பரவல்  திரையரங்குகளில் இருக்கை சதவீதம்
வலிமை

By

Published : Dec 31, 2021, 10:37 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகள், கரோனா கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் ஒமைக்ரான் என்ற உருமாறிய தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டிலும் இதன் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிசம்பர். 31) தமிழ்நாடு அரசு புதிய கரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் படங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவித்த நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (டிசம்பர். 30) இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பால், வலிமை திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Beast Update: உற்சாகத்தில் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details