தமிழ் சினிமாவில் டம்மி பட்டாசு படம் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன், அடுத்ததாக நடித்த ’ஆண் தேவதை’ படம் மூலம் பிரபலமானார். இதனையடுத்து அவர் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு அவரது தம்பி பரசு பாண்டியன், நிகழ்ச்சிக்கு வருகை தந்தார்.
’என்னது நான் படத்தில நடிக்கிறேனா’.... ரம்யா பாண்டியன் தம்பி மறுப்பு
ரம்யா பாண்டியன் தம்பி, தான் படத்தில் நடிப்பதாக வெளியான செய்தி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரம்யா பாண்டியன் தம்பி
இந்நிலையில் ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பெரிய பட்ஜெட் படத்தில் நடிப்பதாகக் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சூப்பர்...வேற என்ன தகவல் எல்லாம் வச்சிருக்கீங்க. இந்த விஷயம் பரசுக்குத் தெரியாதே” எனக் குறிப்பிட்டுள்ளார்.