சூர்யா நடிப்பில் வெளியாகி, ஆஸ்கர் விருதுப் பட்டியலில் தேர்வாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் 'ஜெய்பீம்'. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இருளர் இன மக்களின் வாழ்வியலின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில் தற்போது முழுவதும் இருளர் வாழ்வியல் பின்னணியில், 'இருளி' என்னும் திரைப்படம் உருவாகிறது. இருளர்கள் வாழ்வியலை மையப்படுத்தி, ஒரு அருமையான காதல் திரைப்படமாக உருவாகிறது 'இருளி'. முரளிதரன் கதையில், மதன் கேப்ரியல் இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார்.