நீலம் புரொடக்ஷன் மூலம் இயக்குநர் பா.இரஞ்சித் படங்களை தயாரித்து வருகிறார். முதல் படமான பரியேறும் பெருமாள், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கிருந்தார். இந்த வெற்றிப் படத்தை தொடர்ந்து, 'இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு' எனும் புதிய படத்தை தயாரிக்கிறார் பா.இரஞ்சித். இப்படத்தில் இயக்குநராக அதியன் ஆதிரை, ஒளிப்பதிவாளராக கிஷோர்குமார், இசையமைப்பாளராக டென்மா ஆகியோரை அறிமுகமாகின்றனர்.
'அட்டக்கத்தி' தினேஷ் லாரி ஓட்டுநராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். சொந்தமாக லாரி வாங்க வேண்டும் என்னும் கதாநாயகனின் கனவு நிறைவேறியதா என்பதுதான் படத்தின் ஒருவரிக் கதை. லாரி ஓட்டுநரின் வாழ்க்கை மூலமாக பல சமூக அவலங்களை பேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டாக்கிங் போர்ஷன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.